திருச்சி சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு: சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பூமிநாதன் (51) என்பவர் நேற்று முன்தினம் ஆடு திருடர்களால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை அடுத்து குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் தஞ்சை- திருச்சி எல்லையில் இருக்கக்கூடிய கல்லணைக்கு அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து 10 வயது மற்றும் 17 வயது சிறுவர் 19 வயது இளைஞர் உட்பட 3 பேர் இன்று அதிகாலை 4 மணியளவில் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு இந்த 3 பேரையும் புதுக்கோட்டை கீரனூர் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement