ஜம்மு காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரின் ஷோபியானில் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற மோதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த சஜத் அகமது சாக் மற்றும் ராஜா பசித் யாகூப் என அடையாளம் காணப்பட்டனர்.

today news in tamil

இவர்களிடமிருந்து 2 ஏ.கே ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். மேலும் இவர்கள் பல்வேறு தீவிரவாத வழக்குகளில் தொடர்புடையவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.

புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஹர்துமிர் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே நேற்று மற்றொரு மோதல் சம்பவம் நடைபெற்றது. இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என கண்டறியும் பணி நடந்து வருகிறது.

Advertisement