தண்ணீரே குடிக்காமல் வாழும் 4 அதிசய உயிரினங்கள்

மனித வாழ்க்கையில் தண்ணீர் மிக முக்கியமானது. தண்ணீர் இல்லாமல் மனிதனால் உயிர் வாழ முடியாது. ஆனால் சில உயிரினங்கள் தண்ணீரை அருந்தாமல் வாழ்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம் தண்ணீரே குடிக்காமல் வாழும் 4 அதிசய மிருகங்கள் பற்றித்தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

கங்காரு எலி (Kangaroo rat)

Advertisement

உலகெங்கும் 22 வகையான கங்காரு எலிகள் வாழ்கின்றன. கங்காருவை போல நீண்ட கால்கள் உள்ளதால் இதற்கு கங்காரு எலி என அழைக்கப்படுகிறது. இது வட அமெரிக்காவின் பாலைவன சூழலில் வாழ்ந்து வரும் ஒரு உயிரினம். இது வாழ்நாள் முழுவதும் தண்ணீரை அருந்தாமல் வாழும் திறமை கொண்டது. இதனுடைய கண்ணங்களில் உணவை சேமித்துக்கொள்வதற்கு வசதியாக பைகள் உள்ளது. உடலில் எண்ணெய் பிசுபிசுப்பு ரோமங்களை கொண்ட கங்காரு எலிகளுக்கு வியர்வை ஏற்படாது. இதனால் உடல் வறட்சி இல்லாமல் நீண்ட நேரம் இருக்க முடிகிறது.

Water Holding Frog

இது ஆஸ்திரேலியாவின் பாலைவன பகுதிகளில் வாழும் ஒரு தவளை இனமாகும். கடுமையான வெப்பம் ஏற்படும்போது மண்ணுக்குள் புதைந்து வெப்பத்திலிருந்து தற்காத்துக்கொள்கிறது. இந்த தவளையின் தோளில் தண்ணீரை உறிஞ்சும் தன்மை உள்ளது. இதன் மூலம் உறிஞ்சப்படும் தண்ணீரை அதன் சிறுநீர் பைகளிலும் உடல் திசுக்களிலும் சேமிக்கப்படுகிறது. அந்த தண்ணீரை இழக்காமல் இருக்க தனது தோளின் மீது கூடு ஒன்றை ஏற்படுத்திக்கொள்கிறது. இதனால் அந்த தவளை தண்ணீர் இல்லாமல் பல ஆண்டுகள் உயிர் வாழமுடியும்.

West African Lungfish

இந்த வைகையான மீன்கள் கிட்டத்தட்ட 400 மில்லியன் ஆண்டுகளாக உயிர்வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. லங் ஃபிஷ் எனப்படும் இந்த மீன்களுக்கு காற்றிலிருந்து ஆக்சிசன் பெற்றுக்கொள்ளும் திறன் உள்ளது. வறண்ட சூழ்நிலை உருவாகும் போது இவை சேற்றுக்குள் வலை அமைத்துக்கொண்டு 5 ஆண்டுகாலம் வரை நீரின்றி வாழ்கிறது.

Thorny Devil

உடலில் முட்களை கொண்ட ஒரு பல்லி இனமாகும். இது ஆஸ்திரேலியாவின் பாலைவன பகுதிகளில் வாழும். தனது முட்களுக்கு இடையில் உள்ள இடைவெளியில் மழைத்துளிகள் மற்றும் பனித்துளிகளை சேர்த்து வைத்துக்கொள்கின்றன. சேகரிக்கப்பட்ட இந்த நீர் பிறகு உள்ளே இழுக்கப்பட்டு அங்கிருந்து வாய்க்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் நீர் இல்லாமல் இவைகளால் வாழ முடியும்.