கேரளாவை மீண்டும் தாக்குகிறதா வைரஸ்… இன்று 40 பேருக்கு பாதிப்பு

இந்தியாவில், பல மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே போனாலும், கேரளா மட்டும் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தி பாதிப்பு இல்ல மாநிலமாக இருந்து வந்தது.

இந்நிலையில், இன்று 40 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இந்த தகவலை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார்.

pinarayi-vijayan

இது குறித்து அவர், பாதிக்கப்பட்ட 40 பேரில் 9 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், 16 பேர் மகாராஷ்டிரா, 5 பேர் தமிழகம், 3 பேர் டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்றார்.

Advertisement

இதுவரை, மொத்தமாக 1004 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 173 கேரள மக்கள், வெளிநாடுகளில் பலியாகி உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து கேரளா வருபர்களால் தொற்று அதிகரிக்கிறது. இருப்பினும் வைரஸ் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.