கிளம்பியது மும்பைக்கு… சென்றது மேற்கு வங்காளத்திற்கு… ஊர் மாறி சென்ற 40 ரயில்கள்…

ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் சிக்கி தவித்து வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மீட்கும் விதமாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

இந்த ஷராமிக் சிறப்பு ரயில்கள் லட்சக்கணக்கான தொழிலாளர்களை சொந்த ஊருக்கு கொண்டு சேர்த்த நிலையில் 40 ரயில்கள் மட்டும் வழி மாறி வேறுவேறு இடத்திற்கு சென்று விட்டன. இதற்கு ரயில்வே சார்பில் சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை.

irctc

இதற்கிடையே, 1,450 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி செல்ல வேண்டிய ரயில், சில குழப்பங்கள் காரணமாக காசியாபாத் சென்றடைந்துள்ளது. அதேபோல் மும்பை செல்லவேண்டிய ரயில் மேற்கு வங்காளத்தில் உள்ள புருலியாவிற்கு சென்றடைந்தது.

இந்த வழி குழப்பத்தால், மனதளவிலும், உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் தொழிலாளர்களே. மேலும், அவர்கள் 20 மணி நேரமாக உணவு கிடைக்காமல் அவதிக்குள்ளானதாகத் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் அரசைச் விமர்சித்து வருகின்றனர்.