5.5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி : இன்று மாலை சென்னைக்கு வருகிறது

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தமிழகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போடும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது.

தமிழகத்திற்கு அதிக அளவு தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது தடுப்பூசி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

tamil news today

நேற்று 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்த நிலையில் தற்போது மேலும் 5 லட்சத்து 42 ஆயிரத்து 280 கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று மாலை சென்னை வருவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுவரை 1 கோடியே 83 லட்சத்து 56 ஆயிரத்து 631 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா 3-வது அலை தாக்கக் கூடும் என மருத்துவ வல்லுனர்கள் கூறுவதால் தடுப்பூசியை செலுத்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.