விமானத்தில் தனியாக பயணித்த 5 வயது சிறுவன்

பெரியவர்களே சில நேரத்தில் விமானத்தில் பயணிக்கும் பொழுது, சில சமயங்களில் குழப்பங்கள் ஏற்படுவது உண்டு. ஆனால் இங்கு 5 வயது சிறுவன் டெல்லியிலிருந்து பெங்களூருக்கு தனியாக எந்தவித பயமும் இன்றி விமானத்தில் பயணித்து வந்துள்ளான்.

இதனை பார்த்த பெங்களூருவில் உள்ள விமான பயணிகள் சற்று அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்ந்தனர். இதை பற்றி விசாரிக்கும் பொழுது அச்சிறுவன் தனியாகத்தான் வந்தார் என அவரை அழைத்துச் செல்ல வந்த அவரது தாயார் இதனை உறுதி செய்தார்.

அச்சிறுவனின் தைரியத்தை பார்த்து அனைவரும் சற்று ஆச்சரியம் அடைந்தனர்.