கர்நாடகத்தில் இந்து ஜாகரணா வேதிகே அமைப்பின் தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகி சமித் ராஜ் தரகுட்டே என்பவரின் செல்போனில் 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவர் தனியார் பஸ்ஸில் கல் வீசி தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ADVERTISEMENT
அவரது செல்போனில் ஆய்வு செய்த போது, கடலோர மாவட்டங்களில் அரசியல் தலைவராக செயல்படும் ஒரு முக்கிய நபரின் ஆபாச வீடியோவும் இருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து சமித் ராஜுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவர வாய்ப்பு உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.