நெல்லையில் பெய்த கனமழை: 5,500 கோழிகள் உயிரிழப்பு..!

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழியும் சூழல் ஏற்பட்டுள்ளது.

8 சென்டிமீட்டர் மழை பெய்ததால் நெல்லை மாநகர பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. தாமிரபரணி ஆற்றில் 6000 கன அடி தண்ணீர் வருவதால் அங்கு யாரும் செல்ல வேண்டாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு எச்சரித்துள்ளார்.

tamil news today

இந்நிலையில் வள்ளியூர் அருகே பெய்த கனமழை காரணமாக ஆனைக்குளம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் தண்ணீர் புகுந்துள்ளது.

Advertisement

வெள்ளநீர் அதிகமாக வந்ததால் கோழி பண்ணையில் இருந்த 5,500 கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தது. இதனால் கோழிப்பண்ணையின் உரிமையாளர் வில்சனுக்கு 8 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.