கொரோனா ஊரடங்கு காலத்தில் கர்ப்பமான 7000 மாணவிகள்

கிழக்கு ஆப்பிரிக்கா நாட்டில் கொரோனா ஊரடங்கால் ஐந்து மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் 7000க்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

இதில் பல மாணவிகள் 10 வயது முதல் 14 வயது உடையவர்கள் என தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலை அரசு அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஊரடங்கு காலகட்டத்தில் பாலின அடிப்படையிலான வன்முறை, சுரண்டல் மற்றும் இளம் பருவ சிறுமிகளுக்கு எதிரான பிற வகையான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் சிவில் சொசைட்டி கூட்டணியின் இயக்குனர் பெனடிக்டோ கோண்டோவ் தெரிவித்துள்ளார்.

Advertisement

மாலவி நாட்டில் இதுவரை 3,700 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.