அதிமுகவை சேர்ந்த 73 பேர் திமுகவில் இணைந்தனர்

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுகவை சேர்ந்த பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாசலம், பழனியப்பன் உள்பட பலர் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி,தஞ்சாவூர், ராமநாதபுரம், நாமக்கல், சேலம், தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த அதிமுகவினர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். மு.க.ஸ்டாலின் அவர்களை சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்தினார்.

online tamil news

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் 73 பேர் இன்று தி.மு.க.வில் இணைந்தனர். இதில் நாகர்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன் திமுகவில் இருந்து அதிமுகவுக்கு மாறி தற்போது மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார்.

Advertisement

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, ராஜ கண்ணப்பன், முத்துச்சாமி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.