தமிழகத்தில் எங்கெங்கு பேருந்து இயக்கப்படும் – 8 ஆக பிரித்து அரசு அறிவிப்பு

இந்தியா முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பொது போக்குவரத்தை நாளை முதல் (ஜூன் 1) நடைமுறைபடுத்தும் விதமாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 8 மண்டலங்களாக பிரித்துள்ளது. அவை…

  1. மண்டலம் 1 : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்
  2. மண்டலம் 2 : தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி
  3. மண்டலம் 3: .விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி
  4. மண்டலம் 4 : நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை
  5. மண்டலம் 5 : திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்
  6. மண்டலம் 6: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி
  7. மண்டலம் 7 : காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு
  8. மண்டலம் 8 : சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி
Tamilnadu bus tamil news

மண்டலம் 7 மற்றும் 8 ல் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து பிற மண்டலங்களில் 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்.

அனுமதிபெற்ற தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதிக்கப்படுகிறது.

பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை.

வெளி மாநிலங்களுக்கு செல்லவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரவும், மண்டலங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

அரசு விதிக்கபட்டுள்ள நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி பொது போக்குவரத்திற்கான பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.