நடிகை ராஷ்மிகாவை பார்க்க 900 கி.மீ பயணம் செய்த முரட்டு ரசிகர்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா. இவர் சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இவருக்கு இளம் ரசிகர்கள் உள்ளனர்.

latest tamil news

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் திரிபாதி என்ற ரசிகர் ராஷ்மிகாவை பார்க்க 900 கி.மீ பயணம் செய்து அவரது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். ஆனால் அவரால் ராஷ்மிகாவின் வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. பல்வேறு இடங்களில், அவரது வீட்டு விலாசத்தை கேட்டுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த சிலர் போலீசில் தகவல் தெரிவித்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவருக்கு அறிவுரை கூறி தெலங்கானாவுக்கு திருப்பி அனுப்பினர்.

Advertisement

இந்த தகவல் மும்பையில் படப்பிடிப்பில் இருந்த நடிகை ராஷ்மிகாவுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் “என்னை காண்பதற்காக வெகு தூரம் பயணித்து எனது வீட்டிற்கு சென்றிருக்கிறீர்கள். தயவு செய்து இனி இது போல் செய்ய வேண்டாம்.

உங்களை சந்திக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. இருப்பினும் ஒரு நாள் உங்களை நேரில் சந்திப்பேன் என நம்புகிறேன். அதுவரை உங்கள் இடத்தில் இருந்தே அன்பு செலுத்தினால் நான் மகிழ்ச்சி அடைவேன்” என பதிவிட்டுள்ளார்.