துப்பாக்கியால் சுட்ட மாப்பிள்ளை வீட்டார்…பாதியில் நின்று போன திருமணம்

உத்தர பிரதேச மாநிலத்தில் 22 வயதான இராம் என்ற பெண்ணிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஷாசத் என்ற நபருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

திருமணத்திற்கு முன்பு நடந்த சடங்கின் போது மாப்பிள்ளை வீட்டார் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியுள்ளனர். அப்போது துப்பாக்கியின் குண்டு எதிர்பாராத விதமாக மணப்பெண்ணின் மாமாவின் உடலில் பாய்ந்து காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மணப்பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தினர். மேலும் மாப்பிள்ளை வீட்டாருக்கு சொந்தமான காரை அடித்து நெருக்கினர். மாப்பிள்ளை வீட்டாரை மண்டபத்திலேயே சிறை பிடித்து வைத்திருந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவரை மருத்துவமனையில் சேர்த்தனர். மணப்பெண் கொடுத்த புகார் அடிப்படையில் மணமகன் மற்றும் அவரது சகோதரர்கள் பாப்பு மற்றும் ஷானு ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த துப்பாக்கிக்கான லைசென்ஸையும் கேன்சல் செய்ய பரிந்துரை செய்தனர்.

Advertisement

ஒரே ஒரு துப்பாக்கி குண்டால் மொத்த கல்யாணமும் நின்று போய்விட்டது.