காலி மதுபாட்டில்களை கொடுத்தால் ரூ.10 கிடைக்கும் – குடிமகன்கள் மகிழ்ச்சி

காலி மது பாட்டில்களை சாலையோரங்களிலும் பொது இடங்களிலும் வீசி வருவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுபான கடைகளில் காலி மதுபாட்டில்களை கொடுத்து ரூ.10 திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலையோரங்களில் காணப்படும் காலி மதுபாட்டில்களைச் சேகரித்து அகற்றும் பணி கடந்த 11-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடா்ச்சியாக நேற்று முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபான பாட்டில்களின் மேல் டாஸ்மாக் நிறுவனத்தால் கூடுதலாக ரூ.10 பெறப்படும் என்ற ஸ்டிக்கா் ஒட்டப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது.

ஸ்டிக்கருடன் விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களின் காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் மீண்டும் அளித்து ரூ.10 வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சேகர் தெரிவித்துள்ளார்.