கொரோனாவால் மரத்தின் மேல் கட்டில் போட்டு தனிமைப்படுத்திக் கொண்ட இளைஞர்

தெலங்கானாவைச் சேர்ந்த சிவா என்கிற வாலிபருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாததால் வீட்டிலேயே தனிமை படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவருடைய வீட்டில் ரூம் வசதி இல்லாததால் வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் கட்டில் ஒன்றை கட்டி தனிமைப்படுத்திக் கொண்டார்.

அவருடைய உறவினர்கள் அவருக்கான உணவு மற்றும் மாத்திரைகளை கயிறு ஒன்றில் கட்டி அனுப்புகின்றனர். இந்த புகைப்படம் வெளியாகி பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.