ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் எதுவும் செய்யக்கூடாது என்கிற கருத்து நிலவுகிறது. உண்மையில் ஆடி மாதம் அற்புதமான மாதமாகும். பிறகு ஏன் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை? இதன் பின்னணியில் நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ள அற்புத விஷயங்களை தெரிந்து கொள்வோம்.
ஆடி மாதம் முழுவதும் இறைவனை நினைத்து தினமும் வழிபட வேண்டும். அவரை தவிர வேறு எண்ணங்கள் வரக்கூடாது என்பதற்காக திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்துவதில்லை.
ஆடி மாதத்தில் குடும்பத்துடன் சென்று குல தெய்வத்தை வழிபடும் வழக்கம் உள்ளவர்கள், கோயிலுக்கு செல்வது தடைப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்தனர்.
ஆடி மாதத்தில் ஒரு பெண் கருவுற்றால் அந்த குழந்தை சித்திரை மாதத்தில் பிறக்கும். சித்திரை மாதம் கோடை காலம் என்பதால் குழந்தைக்கும், தாய்க்கும் இதமான காலமாக இருக்காது. இதனால் தான் ஆடி மாதத்தில் திருமணத்தை தவிர்த்தனர்.
விவசாயம் முக்கியமான தொழிலாக இருந்த காலத்தில் விவசாயத்திற்கு என்று ஒதுக்கி வைத்திருக்கும் பணத்தை திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு செலவிட்டால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடிய சூழல் உருவாகும்.
புதுமணத் தம்பதிகள் ஆடி மாதம் தொடங்கியதும் பெண் அவளது பிறந்த வீட்டுக்கு அழைத்து செல்வது கிராமத்தில் இன்றும் வழக்கமாக இருந்து வருகிறது.
இப்படி பல காரணங்கள் இருப்பதால்தான் ஆடி மாதத்தில் எந்த சுபகாரியங்களையும் நடத்துவதில்லை.