in

ஹிந்தி நடிகர் ஆமிர் கான் வீட்டில் நுழைந்த கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இதனால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகரான ஆமிர் கானுடைய வீட்டில் பணியாற்றும் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம்.

இந்நிலையில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அம்மாவை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். அவருக்கு கொரோனா இருக்கக்கூடாது என வேண்டிக்கொள்ளுங்கள் என்று கேட்டுள்ளார்.