ஐஸ்வர்யா ராயின் மகள் தொடுத்த வழக்கு – இப்படி எல்லாமா YouTubeல பேசுவாங்க?

ஐஸ்வர்யா ராய், 50 வயதை நெருங்கப்போகிறார் என்றபோதும் இளம் நடிகைகளுக்கு ஈடுகொடுத்து நடிக்கும் ஒரு மிகச்சிறந்த கலைஞர். பிரபல நடிகர் அபிஷேக் பச்சனை கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
கடந்த 2018ம் ஆண்டுக்கு பிறகு பெரிய அளவில் நடிப்பில் ஆர்வம் காட்டாத ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருடைய மகள் ஆராத்யா பச்சன் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.
12 வயதே நிரம்பிய ஆராத்யா, தாய் ஐஸ்வர்யா ராய் மற்றும் தந்தை அபிஷேக் ஆகியோருடன் சினிமா சம்மந்தமான நிகழ்வுகளுக்கு செல்வதுண்டு. இந்நிலையில் அவருக்கு ஒரு அறிய வகை நோய் இருப்பதாக கூறி சில YouTube சேனல்கள் பொய்யான செய்தியை பரப்பியுள்ளனர்.
இதை கண்டு மனம் நொந்த ஆராத்யா, தாய் மற்றும் தந்தை உதவியுடன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தன்னை பற்றி தவறான கருத்துக்களை கூறும் YouTube சேனல்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பணக்காரர்களின் குழந்தையோ அல்லது ஏழையின் குழந்தையோ, எப்படி இருப்பினும், ஒரு குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கும் எந்த நிகழ்வையும் நீதிமன்றம் ஏற்காது என்று கூறியுள்ளது. மேலும் பொய் உரைத்த அனைவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.