ஆருத்ரா தங்க நிறுவனம்.. 2438 கோடி மோசடி – நடிகர் ஆர்.கே. சுரேஷிற்கும் தொடர்பு?

தமிழ் சினிமாவை பொருத்தவரை திரைப்பட விநியோகஸ்தராக களமிரங்கி பிறகு நல்ல நடிகராக உருவெடுத்துள்ளவர் தான் ஆர்.கே. சுரேஷ். பாலா அவர்களின் தாரை தப்பட்டை படத்தின் மூலம் நல்ல புகழ் பெற்றவர்.
அதன் பிறகு பல திரைப்படங்களை தயாரித்தும் வரும் ஆர்.கே. சுரேஷ், நல்ல பல கதாபாத்திரங்களை ஏற்று நடத்தும் வருகிறார். இந்நிலையில் சென்னையில் செயல்பட்டு வரும் ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் நிறுவனம், தங்களது முதலீட்டாளர்களை ஏமாற்றி சுமார் 2500 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே இந்த நிறுவனத்தை சேர்ந்த ஒரு சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தில் Administrative Director பணி செய்து வரும் மைக்கேல் ராஜ் என்பவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த மோசடியில் நடிகர் ஆர்.கே சுரேஷுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பொருளாதார குற்றதடிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த உண்மை வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த இரண்டு மாத காலமாக ஆர்.கே சுரேஷ் வெளிநாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.