மகேந்திர சிங் தோனி குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த திடீர் அறிவிப்பு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

டோனிக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் சக கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மகேந்திர சிங் டோனி பற்றி சில சுவாரஸ்ய தகவல்களை இதில் பார்ப்போம்.

Advertisement

தோனி இந்திய ரயில்வேயில் டிக்கெட் கலெக்டராக பணியில் சேர்ந்தார். பிறகு ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

உலகளவில் மிகவும் அதிக ஊதியம் பெற்ற கிரிக்கெட் வீரர் தோனி. அவருடைய ஆண்டு வருமானம் 150ல் இருந்து 190 கோடியாக இருந்தது.

போர்ப்ஸ் இதழில் 2015 ஆம் ஆண்டில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் இவருக்கு 23 ஆம் இடம் கிடைத்தது.

மகேந்திர சிங் தோனி தலைமையில் 2007ல் நடைபெற்ற ஐசிசி உலக டி20 போட்டி, 2011ல் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2013ல் ஐசிசி சேம்பியன்ஸ் கோப்பை ஆகிய 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது.

தோனிக்கு சிறு வயதில் மிக பிடித்தமான விளையாட்டு கால்பந்து . அதன் பிறகு அவருக்கு பிடித்தமான விளையாட்டு பேட்மிண்டன்.

அவருடைய நீண்ட முடி அவரது அடையாளமாக மாறியது. அவர் பல முறை அவரது முடி அலங்காரத்தை மாற்றினார்.

இந்திய ராணுவத்தில் லெஃப்டினன்ட் கர்னலாக 2011ல் கெளரவிக்கப்பட்டார்.

தோனி பைக் மீதும் கார் மீதும் ஆர்வம் கொண்டவர். அவரிடம் பல வகையான மோட்டர் பைக்குகளை அவர் வைத்திருக்கிறார். மிக விலை உயர்ந்த கார்கள் அவரிடம் உள்ளது.

2010ஆம் ஆண்டு டெஹ்ராடுனின் சாக்ஷி ராவத்தை தோனி திருமணம் செய்து கொண்டார்.

ஐசிசி ஒருநாள் சர்வதேச போட்டிகள் விளையாட்டு வீரர் விருதை இரண்டு முறை பெற்ற ஒரே இந்திய விளையாட்டு வீரர் தோனி.

2005ஆம் ஆண்டில் ஒருநாள் சர்வதேச போட்டியில் டோனி 148 ரன்கள் எடுத்தார். இந்திய விக்கெட் கீப்பர் எடுத்த அதிகபட்ச ரன் இதுதான்.