Search
Search

“மோதிக்கொள்ளும் Action King மற்றும் தளபதி”.. லோக்கியின் லியோ பட அப்டேட் இதோ!

ஒரு குறிப்பிட்ட படத்தை பற்றி தினமும் ஒரு தகவல் வெளியாகியும் கூட அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்றும் குறையவில்லை என்று கூறினால் அது தளபதி விஜய் அவர்களுடைய நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படம் தான்.

தளபதி விஜய் தனது 67-வது திரைப்படமாக லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார், அவர் தனது 68வது படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்ட இந்நேரத்தில் மீண்டும் லியோ படபிடிப்பு பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளியாகி வருகின்றது, அதனை தளபதி விஜயின் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல ஆதித்யாராம் ஸ்டுடியோவில் லியோ படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருவதாகவும், இதில் ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் தளபதி விஜய் இடையே நடக்கும் ஒரு சண்டைக் காட்சி தற்பொழுது படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் மட்டுமல்லாமல் திரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மன்சூர் அலிகான் என்று ஒரு மாபெரும் நடிகர் பட்டாளமே நடித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் மாதம் 19ம் தேதி இந்த படம் திரைக்கு வர உள்ள நிலையில், இனி இந்த திரைப்படத்தைப் பற்றிய பல தகவல்கள் வெளியாகும் என்றும், விஜய் அவர்களின் பிறந்த நாளன்று (ஜூன் 22) இந்த படத்தில் இருந்து ஒரு glimpse காட்சி வெளியாகும் என்றும் தகவல்கள் பரவி வருகிறது.

You May Also Like