கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிதியுதவி

கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க முதல்வரின் நிவாரண நிதிக்கு உதவ வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தாா். இதனையடுத்து கொரோனா தடுப்பு பணிக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் நிதி உதவி செய்து வருகின்றனர்.

நடிகர் சிவக்குமார், தனது குடும்பத்தினர் சார்பாக ரூ.1 கோடி நிதியுதவி அளித்தார். நடிகரும் திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.

இந்த வரிசையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். முதலில் அவர் 2.5 கோடி வழங்கியதாக செய்திகள் வெளியானது. அதன் பிறகு அஜித் 25 லட்சம் கொடுத்ததாக அவரது செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement