விஜய்யை போல காருக்கு வரிவிலக்கு கேட்ட நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிநாட்டு கார் ஒன்றை இறக்குமதி செய்துள்ளார். அந்த காருக்கு நுழைவு வரி ரூபாய் 60.66 லட்சம் செலுத்த வேண்டும் என வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Tamil Cinema News

நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து விலையுயர்ந்த கார் ஒன்றை இறக்குமதி செய்தார். அந்த காருக்கு வரி விலக்கு அளிக்குமாறு விஜய் நீதிமன்றத்தை நாடினார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் விஜய்யை போல நடிகர் தனுஷும் வரிவிலக்கு கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். தனுஷின் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. ஆனால் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால், விசாரணையை நாளை தள்ளிவைத்துள்ளனர்.