in

ஹாலிவுட்டில் களமிறங்கிய நெப்போலியன்..! கோர்ட் சூட்டில் மிரட்டும் மாவீரன்..!

இயக்குநர் பாரதிராஜா மூலமாக திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். மாவீரன் என்ற ரசிகர்களால் அழைக்கப்படும் இவர், சீவல பேரி பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார்.

இதையடுத்து, தொடர்ந்து பல்வேறு நடித்து வந்த இவர், தனது மகனின் உடல்நிலையின் காரணமாக அமெரிக்காவில் செட்டில் ஆகியிருக்கிறார்.

இந்நிலையில், நெப்போலியன் டெவில்ஸ் நைட் என்ற ஆங்கில படம் ஒன்றில் அருங்காட்சியக மேற்பார்வையாளராக நடித்து வருகிறார்.

இதுகுறித்து, அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தமிழ் படங்களில், வேட்டி, சட்டை, அரிவாள் என்று சுற்றி வந்த நெப்போலியன், தற்போது கோர்ட் சூட் அணிந்து மிரட்ட வருகிறார்.