Search
Search

உடற்பயிற்சி செய்த போது உயிரிழந்த நடிகர்..!

டிவி நடிகர் ஆனந்த் வீர் சூர்யவன்சி என்பவர் பல்வேறு இந்தித் தொடர்களில் நடித்திருக்கிறார். இன்று உடற்பயிற்சி செய்வதற்காக ஜிம்முக்கு சென்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உடனே அவர் அந்தேரியில் உள்ள கோகிலாபென் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார்.

46 வயதான சூர்யவன்சியின் மரணம் டிவி நடிகர்கள் மற்றும் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இறந்துபோன சித்தாந்திற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

You May Also Like