ரியல் ஹீரோ சோனு சூட் படத்துக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு சொந்த ஊர் திரும்ப முடியாத ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாலிவுட் நடிகர் சோனு சூட் உதவி செய்தார். வெளிநாட்டில் தவித்த மாணவர்கள் இந்தியா திரும்புவதற்கு தனி விமானம் ஏற்பாடு, மொபைல் டவர் இல்லாமல் தவித்த மாணவர்களுக்கு மொபைல் டவர் ஏற்பாடு என பல உதவிகளை செய்துவருகிறார்.

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பல உதவிகளை செய்துவருகிறார்.சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவரை நாக்பூரில் இருந்து ஹைதராபாத்துக்கு ஆம்புலன்ஸ் விமானத்தில் அழைத்து வர உதவினார். மேலும் ஆக்சிஜன் உதவிகளையும் செய்து வருகிறார்.

இவருடைய சேவையை பாராட்டி சமூக வலைத்தளமான பேஸ்புக், ட்விட்டரில் இவரது புகைப்படங்கள் பகிரப்பட்டு வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் அவரது உதவிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாலஹஸ்தியில் சோனு சூட் பேனருக்கு பாலாபிஷேகம் செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.