in

அடடா… இப்படி ஒரு வாய்ப்பை நழுவ விட்டுட்டாரே நம்ம தளபதி !!

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “பொன்னியின் செல்வன்”.

இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, அதிதிராவ் ஹைத்ரி, அஸ்வின், ஜெயராம், சரத்குமார் போன்ற பலர் நடித்து வருகின்றனர். 2010 ஆம் ஆண்டில் தொடங்க வேண்டிய இந்த படம் சில காரணங்களால் தள்ளிப்போனது.


இந்நிலையில் மணிரத்னத்தின் உதவி இயக்குனர் ஒருவர் பொன்னியின் செல்வன் படத்தினை குறித்து யாரும் அறியாத தகவலை கூறியுள்ளார். அதாவது இந்த படத்தில் நடிப்பதற்காக விஜய் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவிடம் தான் முதலில் அணுகியதாக கூறியுள்ளார். ஆனால் தளபதி விஜய் இப்படி ஒரு மெகா ஹிட் படத்தை நழுவ விட்டுள்ளார்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.