படப்பிடிப்பின் போது படுகாயமடைந்த நடிகர் விஷால்

நடிகர் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் Enemy படத்தில் நடித்து முடித்துள்ள விஷால் அடுத்ததாக புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்தது.

நடிகர் விஷால் மற்றும் மலையாள நடிகர் பாபு ராஜ் ஆகியோருக்கு இடையேயான சண்டைக் காட்சி நேற்று படமாக்கப்பட்டது. இதில் விஷாலுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஷால் நடிக்கும் இந்த படத்தில் டிம்பிள் ஹயாத்தி, யோகிபாபு, மலையாள நடிகர் பாபுராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Advertisement