புயலுக்கு நடுவே கவர்ச்சி நடனம் போட்ட நடிகை – வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

டவ்-தே புயலின் கோரத்தாண்டவத்தால் குஜராத், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடலோரப் பகுதிகளில் இருந்த கட்டடங்கள் மற்றும் சாலைகள் கடுமையாக சேதமடைந்தன. யல் கரையைக் கடந்தபோது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் ஏராளமான மரங்களும், மின் கம்பங்களும் சரிந்து விழுந்தன. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இந்தி நடிகை நடிகை தீபிகா சிங் டவ் தே புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு நடுவில் நின்று நடனமாடியும், புகைப்படங்கள் எடுத்தும் வலைத்தளத்தில் பதிவேற்றினார். இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.