in

கரெண்ட் பில் பார்த்து ஷாக்கான காலா நடிகை..! கேட்டா நீங்களும் ஷாக் ஆவீங்க..!

கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீட்டில் தங்களது நேரத்தில் செலவிட்டு வருகின்றனர்.

ஒரு சிலர் வீட்டிலேயே தங்களது அலுவலக பணியையும் செய்து வருகின்றனர். இதனால், மின்சாதன பொருட்களின் பயன்பாடு அதிகரித்து, கரென்ட் பில் எகிறிவிடுகிறது.

இது ஒரு புறம் இருக்க, சினிமா பிரபலங்கள் தங்களது வீட்டின் கரெண்ட் பில் குறித்து டுவிட்டரில் பதிவிட்டு அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது காலா பட நடிகையான ஹீமா குரேஷி, தனது டுவிட்டர் பக்கத்தில் கரென்ட் பில் குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில், போன மாசம் 6 ஆயிரம் கரென்ட் பில் வந்துக்கொண்டிருந்தது. ஆனால், இப்போது 50 ஆயிரம் ரூபாய் கரெண்ட் பில் வந்துள்ளது.

எப்படி இந்த கட்டண உயர்வு வந்தது. எங்களுக்கு விளக்குங்கள் என்று தெரிவித்துள்ளார்.