in

அம்மா கிட்ட கேப்பாங்க.. பாலியல் தொந்தரவு குறித்து பேசிய நடிகை கல்யாணி..!

குழந்தை நட்சத்திரமாக நடித்து பெயர் வாங்கியவர் நடிகை கல்யாணி. இவர், பிரபுதேவாவின் அள்ளித்தந்த வானம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்கத் துவங்கினார்.

இதையடுத்து, சதாவிற்கு தங்கையாக, ஜெயம் படத்தில் நடித்து அசத்தியிருப்பார். பின்னர், சில படங்களில் நடித்த கல்யாணி, டிவி சீரியல்களில் நடித்து வந்தார்.

அதன்பிறகு, படங்களில் ஏதும் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில், இவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், நான் கதாநாயகியாக உயர்ந்த பிறகும் பெரிய படங்கள் அமையாதது வருத்தம். மீ டூ சம்பவம் எனக்கும் நடந்துள்ளது.

கதாநாயகியாக சில படங்களில் நடித்தபோது, எனது அம்மாவிற்கு போன் வரும். பெரிய தயாரிப்பாளர், நடிகரின் படம் என்றெல்லாம் கூறிவிட்டு, அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள்.

அம்மா வேண்டாம் என்று போனை துண்டித்து விடுவார். அதற்கு பிறகுதான் அதன் அர்த்தம் எனக்கு தெரிய வந்தது.