in

அன்னைக்கு அது தெரியாம போச்சு.. அஜித்தை நினைத்து வருத்தப்பட்ட நடிகை..!

கோவா, கோ, ஏகன், பலே பாண்டியா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை பியா பாஜ்பாய்.

உத்திர பிரதேசத்தை சேர்ந்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தல அஜித்துடன் ஏகன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

அதில், ஏகன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டபோது அஜித் எவ்வளவு பெரிய ஸ்டார் என்பதும், தான் எவ்வளவு பெரிய படத்தில் நடிக்கிறேன் என்பதும் தெரியாது என்று தெரிவித்தார்.

மேலும், ஒரு பெரிய படத்தில் நடிக்கிறோம், அதில் நடித்து முடித்த பிறகு அஜித் யார், படம் எப்படிப்பட்டது என்பது தெரியாமல் போய்விட்டதே என்று மிகவும் வருத்தப்பட்டேன் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு நாள் நான் வேறு ஒருவராக இருக்க முடியும் என்றால், நான் அஜித் சாராக இருக்க விரும்புகிறேன். ரசிகர்கள், மக்களின் அன்பை உணரவே அஜித் சாராக இருக்க ஆசைப்படுகிறேன் என்று அவர் தெரிவித்தார்.