என்னை விட்டு பிரிக்க முடியாதது ஒன்றே ஒன்று தான்..! அப்பாவைப் போல் வலம் வரும் பிரபல தமிழ் நடிகை

நடிகர் கமல்ஹாசன் சினிமா துறையில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து, தற்போது அரசியல் துறையிலும் களமிறங்கியுள்ளார்.

அவரது வாரிசான நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் மற்றும் பிற மொழி திரைப்படங்களில் நடித்து சினிமாத்துறையில் தனது அப்பாவைப் போல் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வருகிறார்.

Shruti Hassan - Latest News on Shruti Hassan | Read Breaking News on Zee  News

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்ருதி, அதில் கூறியது. எழுத்து என்பது எனக்கு சுதந்திரத்தை கொடுக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. நான் பாடல், மற்றும் கவிதைகளை எழுது வருகிறேன்.

இது பல நேரங்களில் எனக்கு கை கொடுக்கும் என நம்புகிறேன். நான் எழுதும் கவிதை மற்றும் கதைகளுக்கு திரை வடிவம் கொடுக்க விரும்புகிறேன் என்று ஸ்ருதி கூறியுள்ளார்.

எனக்கு பல வேலைகள் இருந்தாலும், எழுத்து என்பது என்னை விட்டு பிரிக்க முடியாத ஒரு நிவாரணியாக இருந்து வருகிறது. மேலும் பாடல் எழுதுவது எனக்கு பிடித்தமான ஒன்று, பல ஆண்டுகளாக என் திறமைகளை கூர் தீட்டி வருகிறேன் என்று செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.