அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு

வருமானத்துக்கு அதிகமாக 55% சொத்து குவித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் போக்குவரத்து கழகங்களுக்கு உபகரணங்கள் வாங்கியதில் ஊழல் முறைகேடுகள் நடந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக போக்குவரத்து கழகங்களில் எப்படி எல்லாம் ஊழல் நடந்துள்ளது என்பதை விளக்கி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் புகார் அளித்தது. இந்த நிலையில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.

விஜயபாஸ்கருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஏராளமான ஆவணங்கள், ரூ25 லட்சம் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
விஜயபாஸ்கருக்கு சொந்தமான கொப்பரை கிடங்கில் ஆவணங்கள் பதுக்கி வைத்து இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
2016-ம் ஆண்டு எம்.ஆர். விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தமக்கு ரூ2.51 கோடி சொத்துகள் இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் தமது சொத்து மதிப்பு ரூ8.62 கோடி என காட்டியிருக்கிறார். மொத்தத்தில் வருமானத்துக்கு அதிகமாக 55%% சொத்துகளை சேர்த்து தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.