Search
Search

ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா.. திருவாரூரில் ஒரு காட்சி ரத்து – ஏன்?

பிரபல நடிகைகள் திரிஷா மற்றும் நயன்தாரா பட்டியலில் தற்பொழுது இணைந்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்றால் அது மிகையல்ல. தொடக்கம் முதலிலேயே தனது நேர்த்தியான நடிப்பினால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த ஒருவர் அவர்.

தற்பொழுது இவருடைய நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் ஃபர்ஹானா. இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு இஸ்லாமிய பெண்ணாக தோன்றி நடித்துள்ளார், நேற்று இந்த படம் உலக அளவில் வெளியாகி நல்ல பல விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஆனால் இது இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு திரைப்படம் என்று கூறி, சில இடங்களில் படத்தை திரையிட கடும் எதிர்ப்பு கிளம்பி வருவதையும் பார்க்கமுடிகிறது. இந்நிலையில் நேற்று திருவாரூரில் ஃபர்ஹானா பட காட்சிகள் திரையிடக்கூடாது என்று எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் ஒரு காட்சி ரத்தும் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ஃபர்ஹானா திரைப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம் அல்ல, இது அவர்களை பெருமைப்படுத்துகிறார் ஒரு நல்ல திரைப்படம் என்பதை மக்கள் திரையரங்கில் சென்று படத்தை பார்த்தால் புரியும் என்று பல சினிமா விமர்சகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

You May Also Like