Connect with us

TamilXP

அஜினோமோட்டோ சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்

மருத்துவ குறிப்புகள்

அஜினோமோட்டோ சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்

உணவில் சுவைக்காக சேர்க்கப்பட கூடிய ஒரு உணவு பொருள்தான் இந்த அஜினமோட்டோ. இது நாம் சாப்பிடும் எல்லா ரெடிமேட் உணவுகளில் சேர்க்கப்படும் முக்கியமான கலவையாகும்.

1909-ம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த அஜினமோட்டோ கார்ப் என்ற நிறுவனம் உருவாக்கியது தான் அஜினமோட்டோ. அஜினோமோட்டோ என்பது உப்பு போன்ற ஒரு பொருளாகும். அஜினோமோட்டோ உடலுக்கு கேடு என்று ஒரு பக்கம் பேசப்பட்டு வந்தாலும் இன்னொருபுறம் இந்திய உணவுகள் பலவற்றில் அஜினோமோட்டோ சேர்க்கப்பட்டு வருகிறது.

அஜினோமோட்டோ என்பது சோடியம் மற்றும் குளுட்டமிக் அமிலத்தில் இருந்து தயாரிக்கப்படும் கலவையாகும். சீன உணவு பழக்கத்தில் அஜினோமோட்டோ பயன்படுத்தப்படுகிறது.

சீனர்களின் உணவுகளான நூடுல்ஸ், சூப், ஃப்ரைட் ரைஸ் போன்ற உணவுகளில் அஜினோமோட்டோ சேர்க்கப்பட்டது. தற்போது ஆசிய கண்டம் முழுவதும் பரவி உள்ளது. அஜினோமோட்டோவில் வைட்டமின்கள், புரதங்கள், கொழுப்புகள் என எதுவும் இல்லை. இது உண்மையிலேயே உடலுக்கு கேடு விளைவிக்கிறதா என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அஜினோமோட்டோவை குறைந்த அளவில் பயன்படுத்தினால் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படாது. அதிகமாக பயன்படுத்தினால் உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம். இதில் உள்ள குளுட்டமிக் அமிலமானது மூளையில் நரம்பு கடத்தியாக செயல்படுகிறது. இதனால் அஜினோமோட்டோ தீங்கு விளைவிக்க கூடியது என பலர் நம்புகின்றனர்.

அஜினோமோட்டோவை அதிகம் சேர்த்துக்கொண்டால் உடலில் வியர்வை பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது. குடலில் அமிலத் தன்மை, வயிற்றில் எரிச்சல், மூட்டு மற்றும் தசை வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதன் விளைவாக செரிமான பிரச்சனைகளும் உருவாகும்.

அஜினோமோட்டோ அதிகம் சேர்ப்பவர்களுக்கு ஒற்றை தலைவலி அல்லது கடுமையான தலைவலியை ஏற்படுத்தும். அஜினோமோட்டோவில் உள்ள கலவைகள் தூங்கும்போது சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.

ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி உணவில் 0.5 கிராம் அஜினோமோட்டோவை சேர்த்து கொள்வது பாதுக்காப்பானது.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் என்பதால் அவர்கள் அஜினோமோட்டோவை தவிர்ப்பது நல்லது.

Continue Reading
Advertisement
You may also like...

More in மருத்துவ குறிப்புகள்

Advertisement
Advertisement

Popular Posts

To Top