நாளை வெளியாகும் AK 62 அப்டேட்.. டைட்டில் வெளியாகும் என்று அறிவித்த இயக்குநர்!

பொன்னியின் செல்வனின் பரபரப்பு, கங்குவா படத்தின் அறிவிப்பு, லியோ படம் உருவாகும் சுறுசுறுப்பு என்று தமிழ் திரையுலகமே பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கும் நேரத்தில் நாளை தனது பிறந்த நாளை கொண்டாவிருக்கிறார் சூப்பர் ஹிட் நடிகரான தல அஜித்.
இந்நிலையில் நாளை அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு AK 62 படத்திற்கான அப்டேட்டை எதிர்பார்த்து அவருடைய ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்று தான் கூற வேண்டும். லைகா நிறுவனம் தயாரிக்கும் அஜித்குமாரின் 62வது திரைப்படத்தை முதலில் நயன்தாரா அவர்களின் கணவரும் பிரபல இயக்குனருமான விக்னேஷ் இயக்குவதாக இருந்தது.
அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, இறுதியாக பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. இருப்பினும் அவருக்கு கொடுக்கப்பட்ட காலக்கெடுவும் தாண்டி பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தொடர்ச்சியாக அஜித்குமாரின் ரசிகர்கள் அவருடைய 62வது படத்தைப் பற்றின அறிவிப்பை தொடர்ச்சியாக கேட்டு வருகின்றனர்.
தற்போது இதற்கு விடை அளிக்கும் வகையில் நாளை அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு நிச்சயம் ஒரு அப்டேட் வரும் என்பதை உறுதி செய்துள்ளார் அவருடைய மனைவியும் முன்னாள் நடிகையுமான ஷாலினி அஜித்குமார்.
அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “தயாராக இருங்கள் அஜித் குமாரின் 62வது படம் குறித்த அப்டேட் தயாராகி வருகின்றது என்று கூறியுள்ளார்.இதை கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.