முடிவுக்கு வரும் காத்திருப்பு.. அஜித் குமார் 62 – இன்று வெளியாகும் அப்டேட்!

தல அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள 62வது படம் தான், தற்போது கோலிவுட் வட்டாரத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது. முதலில் பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் இந்த படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானது.
அந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவும் உறுதி செய்தது, ஆனால் இந்த படத்திற்கான கதையை தயார் செய்வதில் சற்று காலதாமதம் ஏற்பட்டதால் இந்த படத்தின் வாய்ப்பு இயக்குநர் மகிழ் திருமேனிக்கு சென்றது.
ஆனால் அவரும் இந்த படத்திற்கான கதையை இன்னும் முடிக்காத நிலையில் இடையில் சில விஷயங்கள் நடந்ததாக கூறப்பட்டது. அது ஒருபுறம் இருக்க இன்று மாலை 6 மணிக்கு AK 62 அப்டேட் கட்டாயம் வெளியாகும் என்றும் மகிழ் திருமேனி கூறியுள்ளார்.
ட்விட்டர் தளத்திலும் AK 62 என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆகி வருகின்றது, மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.