சாராயத்தில் கிருமிநாசினி கலந்து குடித்த 10 பேர் பலி

ஆந்திரா மாநிலத்தில் அதிக போதைக்காக சாராயத்தில் கிருமிநாசினி கலந்து குடித்தால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் குரிசேடு என்ற கிராமத்தில் 50க்கும் மேற்பட்டோர் கள்ள சாராயம் குடித்துள்ளனர். அதில் கிருமிநாசினி கலக்கப்பட்ட சாராயத்தை குடித்து 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.