சினிமாவை பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்கள்

உலகிலேயே அதிகளவில் மிருகங்கள் நடித்த படம் 2004ம் ஆண்டில் வெளிவந்த Around The World in 80 Days என்ற படம்தான். இதில்
ஆடுகள் – 38,000
எருமைகள் – 2848
கழுதைகள் – 950
குதிரைகள் – 800
குரங்குகள் – 513
யானைகள் – 15
காளை மாடுகள் – 17
இது தவிர பல விலங்குகளும் நடித்தன.

1922ம் ஆண்டில் முதன்முதலில் வங்காளத்தில்தான் சினிமாவுக்கு கேளிக்கை வரி விதிக்கப்பட்டது.

திரைப்பட துறையில் தெலுங்கு மொழியில்தான் அதிக படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆஸ்கர் விருதிற்காக அனுப்பப்பட்ட முதல் திரைப்படம் 1957ல் வெளிவந்த Mother India என்ற திரைப்படம் தான். முதல் தமிழ் படம் தெய்வ மகன்.

ஃப்ளாஷ்பேக் உத்தியை முதன்முதலில் கடைபிடித்து இயக்கப்பட்ட படம் Rashomon (1950). இது ஜப்பானிய மொழி திரைப்படமாகும்.

புதுடெல்லியில் உள்ள ஷீலா என்ற தியேட்டர்தான் இந்தியாவில் முதன்முதலில் கட்டப்பட்ட 70MM தியேட்டர்.

1959ல் வெளிவந்த ‘பென்-ஹர்’ திரைப்படம் 11 ஆஸ்கர் விருதுகளை பெற்றது. அதன் பிறகு தான் 1997ல் வெளிவந்த ‘டைட்டானிக்’ படம் 11 ஆஸ்கர் விருதுகளை பெற்றது.

1944ல் வெளிவந்த ‘லாரா’ திரைப்படம்தான் முதன்முதலாக வெளியான துப்பறியும் படம்.

1945ல் நியூயார்க் நகரில் ஆஸ்கர் விருது ஒன்று ஏலத்தில் விடப்பட்டு 68,500 டாலர்களை பெற்றது. ஆஸ்கர் விருது விற்பனையானது அதுவே முதல்முறை.

1941ம் ஆண்டு ‘லீலா சிட்னிஸ்’ என்ற நடிகை வானொலி விளம்பரங்களில் முதன்முதலாக LUX சோப் விளம்பரத்திற்கு குரல் கொடுத்தார். தற்போது பல நடிகர்கள் நடிகைகளை டிவி விளம்பரங்களில் பார்க்க முடிகிறது.

வெளிநாட்டு திரைப்படத்திற்கு இசையமைத்த முதல் இந்தியர் சித்தார் இசைக் கலைஞர் பண்டிட் ரவி சங்கர்.

1985ம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 912 திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. இது மிகப்பெரிய சாதனை.

இந்திய இயக்குனர் சத்யஜித் ராய் 1992ல் சிறப்பு ஆஸ்கார் விருது பெற்றார். இவ்விருதை பெற்ற முதல் இந்தியர் இவர்தான்.