அமேசான் CEO பதிவியிலிருந்து விலகுகிறார் ஜெப் பிஸோஸ்.

அமேசான் நிறுவனத்தை உருவாக்கியவரும்; அதன் தலைமை செயல் அதிகாரியுமான ஜெப் பிஸோஸ், தன் பதவி விலகலை இன்று (ஜூலை 5) அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

27 ஆண்டுகளுக்கு முன் ஜெப் பிஸோஸ் ஆன்லைன் புத்தக விற்பனை நிறுவனமாக தனது வீட்டின் கார் ஷெட்டில் உருவாக்கினார். வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் புத்தகங்களை பதிப்பாளர்களிடமிருந்து வாங்கி அவற்றை தபால் அலுவலகம் மூலம் வீடுகளுக்கு அமேசான் டெலிவெரி செய்து வந்தது.

பிறகு படிப்படியாக உயர்ந்து தற்போது உலகின் பெரும்பாலான நாடுகளில் செயல்படும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக அமேசான் வளர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 1.7 லட்சம் கோடி டாலர். கடந்தாண்டு இந்நிறுவனத்தின் வருமானம் 38,600 கோடி டாலர்.

Advertisement

உலகின் பெரும் கோடீஸ்வரராக உயர்ந்த ஜெப் பிஸோஸின் தற்போதைய சொத்து மதிப்பு 20,000 கோடி டாலர் ஆகும். இந்நிலையில், அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து ஜெப் பிஸோஸ் விலக உள்ளதாகவும் அத்தகவலை இன்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. அமேசானின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஆண்டி ஜாஸி என்பவர் பொறுப்பேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.