35 நகரங்களில் Flex Delivery வாய்ப்புகளை விரிவுபடுத்தும் Amazon India

Amazon உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் ஆன்லைன் விற்பனை நிறுவனம். இந்நிறுவனம், வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் Amazon Flex Delivery என்ற முறையை இந்தியா முழுவதும் 35 நகரங்களில் விரிவாக்கம் செய்கிறது.

Amazon Flex delivery Tamil

இதனால், பொருள்களை விரைவாக விநியோகம் செய்ய முடியும். இதன் மூலம், பல பகுதி நேர வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கும். மேலும், ஒரு டெலிவரி செய்தால் குறைந்தது ரூ.120 முதல் ரூ.140 வரை சம்பாதிக்க முடியும் என தெரிவித்துள்ளது. Metro மற்றும் non metro பகுதிகளில் இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Amazon Flex Delivery June மாதம் 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டு June 2020-ல் 35 நகரங்களில் விரிவாக்கம் செய்கிறது.

Advertisement

இது குறித்து, Amazon India Director, Prakash Rochlani கூறியதாவது, “கடந்த ஒரு வருடமாக இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பகுதி நேர வேலையை இது உருவாக்கி தரும். குறிப்பாக, இந்த ஊரடங்கு சமயத்தில் தங்களது பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ள இது உதவும். மேலும், வைரஸ் பரவமால் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Amazon Flex delivery programme extended to more than 35 cities in India.