in

iOS பெயரை மாற்றும் ஆப்பிள் நிறுவனம்…?

மொபைல், கம்ப்யூட்டர் உலகில் அசைக்க முடியாத ஜாம்பவனாக இருப்பது ஆப்பிள் நிறுவனம். அந்நிறுவனம் வெளியிடும் தயாரிப்புகள் பலருக்கு மிகவும் பயனுள்ளதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும்.

Apple may rename iOS to iPhoneOS

அந்நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்புகளில் ஒன்று iOS. இதன் பெயரைத்தான் iPhoneOS என்று மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரபூர்வமாக அறிவிப்பு வரவில்லை. ஆனால், Apple நிறுவனம் நடத்தும் WWDC 2020 எனும் நிகழ்ச்சி June 22-ம் தேதி நடைபெற உள்ளது. ஒரு வேளை இந்த நிகழ்ச்சியில் இது குறித்து அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளது.

WWDC 2020 நிகழ்ச்சியில், மேலும் புதிய 3 தயாரிப்புகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதுமட்டுமல்லாமல், iOS, iPhone மற்றும் iPod போன்ற தயாரிப்புகளுக்கும் வழங்கும் OS-களுக்கும் பெயர் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் உண்மைத்தன்மை வரும் June 22-ம் தேதி அதிகாரபூர்வமாக தெரிந்து விடும்.