ஆப்பிள் நிறுவனத்தின் தவற்றை சுட்டிக்காட்டிய 14 வயது சிறுவன் – மன்னிப்புக் கேட்ட ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம், ஃபேஸ்டைம் (FaceTime) என்கிற வீடியோ காலிங் சேவையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப தவறால், தங்களது ஐபோன் மற்றும் ஐபாட் வாடிக்கையாளர்களிடம் அதிகாரபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது.

ஃபேஸ்டைம் (FaceTime) வீடியோ காலிங் சேவையின் மூலம் எதிர் உள்ளவருக்கு அழைத்தால், அவர்கள் வரும் அழைப்பை அனுமதிக்கும் முன்னே அவர்களது குரல் ஒலிகள் அழைப்பவருக்கு கேட்கத் தொடங்கிவிடும்.

apple

Advertisement

ஐஓஎஸ் 12.1 மற்றும் அதற்குக் முன்னால் வந்த ஐஓஎஸ் வெர்ஷன்களில் இந்த பிரச்சனை இருந்துள்ளது. இதனை தாம்சன் எனும் 14 வயது சிறுவன் ஆப்பிள் நிறுவனத்திற்கு சுட்டிக்காட்டினான்.

இப்பிரச்சனையை ஆப்பிள் நிறுவனம், காதும் காதும் வைத்தாற்ப்போல் சரிசெய்து விடலாம் என்று எண்ணியது. ஆனால் அதற்குள் இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவத்தொடங்கியது.

பின்னர், இப்பிரச்சனைக்கு ஆப்பிள் நிறுவனம் அதிகாரபூர்வமாக மன்னிப்பு தெரிவத்ததோடு மட்டுமல்லாமல் ஃபேஸ்டைம் (FaceTime) வீடியோ காலிங் சேவையை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

மேலும், இப்பிரச்சனையை சரி செய்து விட்டதாகவும், விரைவில் புதிய அப்டேட் வரும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.