12 ராசிகளுக்கான ஏப்ரல் மாத ராசி பலன் 2021

ஏப்ரல் மாதம் மேஷம் ராசி பலன்

வீடு வாங்குதல், இடமாற்றம் செய்ய நினைப்பவர்கள் சித்திரையில் இடமாற்றம் செய்யலாம். ஒரு சில விஷயங்களில் தடுமாற்றம் இருந்தாலும் சில விஷயங்கள் நல்ல பலனைத் தரும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். பிறரிடம் பேசும்போது கவனமாக பேச வேண்டும்.

சுயதொழில் செய்பவர்களுக்கும் புதிதாக தொடங்க நினைப்பவர்களுக்கும் இந்த மாதம் நல்ல மாதமாக அமையும். புதிய முதலீடு செய்வதால் நன்மையை தரும். மருத்துவம் சார்ந்த விசயங்களில் நல்ல பலனைத் தரும்.

Advertisement

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2021

பரிகாரம்

உங்கள் வீட்டில் வாரம் ஒருமுறை கடுகு எண்ணெய் போட்டு தீபம் ஏற்றுவது நல்லது. ஒரு தாம்பூலத் தட்டில் பச்சரிசி வைத்து அதன் மீது கடுகு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடவும். காலை 6 மணி முதல் 9 மணிக்குள் இதனை செய்ய வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் பல நன்மைகள் உருவாகும்.

ஏப்ரல் மாதம் ரிஷபம் ராசி பலன்

எந்த காரியமாக இருந்தாலும் நம்பிக்கையோடும் துணிச்சலோடும் செய்வீர்கள். மாதத்தின் முதல் பாதியில் ராசியில் செவ்வாய் மற்றும் ராகு இருப்பதால் சில வேலைகளை செய்யும்போது செய்யலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் ஏற்படும். இந்த குழப்பத்தால் மன பயம் ஏற்படும். அந்த பயத்தை தவிர்த்து தைரியமாக காரியங்களை செய்து வந்தால் வெற்றி கிடைக்கும்.

இந்த மாதத்தில் வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அதிகம். கூடுதல் சம்பளத்தில் நல்ல வேலை மாற்றம் ஏற்படலாம். சித்திரை மாதத்தில் சுப காரியங்களை செய்யலாம்.

வீடு மாற்றுவதை தவிர்ப்பது நல்லது. உங்கள் ராசியில் கோச்சார பலன் சிறப்பாக இருப்பதால் திருமண தடைகள் நீங்கும்.

பரிகாரம்

புதன்கிழமைகளில் நல்லெண்ணெய் ஊற்றி காமாட்சி விளக்கு ஏற்றுவது நல்லது ஒருநாள் வீட்டில் கணவன் மனைவி இடையேயான பிரச்சனைகள் நீங்கும்

ஏப்ரல் மாதம் மிதுனம் ராசி பலன்

இந்த மாதம் உங்களுக்கு தன்னம்பிக்கை நிறைந்ததாக இருக்கும். ஏதேனும் ஒரு விஷயத்தில் தோல்வி ஏற்பட்டால் அந்த தோல்வி ஏன் ஏற்பட்டது என சிந்தித்து அதிலிருந்து வெற்றிபெற கூடியவர்களாக இருப்பீர்கள். ஏப்ரல் 9ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை கிரகநிலை காரணமாக சிறுசிறு பிரச்சினைகள் தடுமாற்றங்கள் ஏற்படலாம். அதன்பிறகு சிறப்பான பலன்களை பெறுவீர்கள்.

இந்த மாதத்தில் தொழில் மற்றும் வேலை மாற்றத்தை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கும். குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. இரவு நேரங்களில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்க வேண்டும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அலுவலகத்தில் சக ஊழியர்களால் உங்களுக்கு தொந்தரவு ஏற்படலாம். அதனை அனுசரித்து செல்வது நல்லது. ஏப்ரல் 9ஆம் தேதிக்கு பிறகு திருமண முயற்சி எடுப்பவர்கள் குலதெய்வ வழிபாடு செய்த பிறகு தொடங்கலாம்.

பரிகாரம்

ஒரு மஞ்சள் துணியில் 3 வெற்றிலை, 3 பாக்கு, 3 ஒரு ரூபாய் காயின் கட்டிவைத்து சனிக்கிழமை அன்று காலை 6 மணி முதல் 9 மணிக்குள் அதைவைத்து பூஜை செய்ய வேண்டும். அதற்கு தினமும் சூடம் காட்டி வழிபட வேண்டும்.

அடுத்த வாரத்தில் அந்த மஞ்சள் துணியை பிரித்து அதில் உள்ள காசை மட்டும் எடுத்து மற்றதை தண்ணீரில் விட்டு விடலாம். இதனால் உங்கள் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

ஏப்ரல் மாதம் கடகம் ராசி பலன்

இந்த மாதம் உங்களுக்கு எதிர்ப்புகள் விலகும். எல்லாவித நன்மைகளும் உண்டாகும். பயணங்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். உங்கள் ராசியில் தனாதிபதி சூரியன் ஆட்சியில் இருப்பதால் பணவரத்து அதிகரிக்கும்.

ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். கணவன் மனைவி இடையே உறவு பலப்படும். குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். புதிய வாய்ப்புகள் பெறுவதில் தடுமாற்றம் ஏற்படலாம்.

பணியில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். அரசியலில் உள்ளவர்கள் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

பரிகாரம்

அபிராமி அந்தாதி பாடி அம்மனை வழிபட்டு வந்தால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும் காரிய அனுகூலம் ஏற்படும்.

ஏப்ரல் மாதம் சிம்மம் ராசி பலன்

இந்த மாதம் மனதில் உள்ள வீண் கவலைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். வெறுப்பு, கோபம் நீங்கும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். அடுத்தவர்கள் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்க்கவும்.

தொழில் வியாபாரத்தில் உள்ளவர்கள் போட்டியை சந்திக்க நேரிடும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை விட சற்று குறைவாக இருக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை ஏற்படும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் இருந்துவந்த பிரச்சனை குறையும். எந்த சூழ்நிலை வந்தாலும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

பெண்களுக்கு மன கவலை ஏற்படலாம். கலைத்துறையில் உள்ளவர்கள் மற்றும் அரசியலில் உள்ளவர்கள் வீண் பேச்சை குறைப்பது நல்லது.

பரிகாரம்

அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வந்தால் எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடக்கும் மனோபலம் கூடும்

ஏப்ரல் மாதம் கன்னி ராசி பலன்

கன்னி ராசிக்காரர்கள் இந்த மாதம் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். வீண் வாக்குவாதங்கள் நீங்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உருவாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நீடிக்கும். பிள்ளைகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் உருவாகும்.

நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். வேலை தேடி கஷ்டப்படுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

பெண்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்கள் மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது.

பரிகாரம்

ஐயப்பனுக்கு அர்ச்சனை மற்றும் நெய்யபிஷேகம் செய்து வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும் குடும்ப பிரச்சனை மறையும்

ஏப்ரல் மாதம் துலாம் ராசி பலன்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். வீண்செலவு உருவாகும். குடும்பத்தில் நிம்மதி குறைய வாய்ப்புள்ளது. வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.

பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க நேரிடும். வியாபாரம் தொடர்பான முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படலாம். புதிய வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக அமையும்.

பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை ஏற்படும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும்

பரிகாரம்

வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனை வணங்கி வந்தால் எல்லா பிரச்சனைகளும் தீரும்

ஏப்ரல் மாதம் விருச்சிகம் ராசி பலன்

இந்த மாதம் உங்களுக்கு மனதில் உற்சாகம் பிறக்கும். வீண் வாக்குவாதங்கள் நீங்கும். அதேநேரத்தில் வீண் பகை உருவாகலாம். நண்பர்களைப் பிரிய வேண்டிய சூழல் ஏற்படலாம்.

குடும்பத்தில் சிறு சிறு சண்டைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்ல வேண்டும். பிள்ளைகள் பற்றிய கவலை உருவாகும்.

வியாபாரத்தில் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படலாம். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கடன் கொடுக்கும் போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் உருவாகும். அரசியலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.

பரிகாரம்

கந்த சஷ்டி கவசத்தை படித்து முருகனை வணங்கி வந்தால் எதிர்ப்புகள் விலகும் குடும்ப பிரச்சனைகள் நீங்கும்

ஏப்ரல் மாதம் தனுசு ராசி பலன்

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தன்னம்பிக்கை பிறக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை நீங்கி வளர்ச்சி பெறும். லாபம் அதிகரிக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். பணவரத்து அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பணிச்சுமை காரணமாக உடல் அசதி ஏற்படலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.

குடும்ப பிரச்சனை நீங்கி கணவன் மனைவியிடையே ஒற்றுமை நீங்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை மறையும். பிள்ளைகள் கல்வியில் கவனம் செலுத்துவார்கள். கல்வி சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும்.

பரிகாரம்

வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி வணங்கி வந்தால் பணவரத்து அதிகரிக்கும்.

ஏப்ரல் மாதம் மகரம் ராசி பலன்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வீண் செலவு குறையும். பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு செயலையும் செய்யும் போது யோசித்து செய்வது நல்லது. இருக்கும் இடத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

வியாபாரம் தொடர்பான பயணங்கள் உருவாகும். எதிர்பார்த்த லாபம் தாமதமாகும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் உருவாகலாம். வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும்.

அலுவலகத்தில் பணிச்சுமை ஏற்படும். பணிகளை கூடுதல் கவனத்துடன் செய்து முடிக்க வேண்டும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தாய் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

பரிகாரம்

சனிக்கிழமையில் காகத்திற்கு எள் சாதம் வைத்து சனி பகவானை வணங்கி வந்தால் உடல் ஆரோக்கியம் அடையும் கடினமான பணிகளை எளிதாக முடியும்

ஏப்ரல் மாதம் கும்பம் ராசி பலன்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். உடல் உழைப்புகள் அதிகரிக்கும். சுப செலவுகள் உண்டாகும். ஆன்மீக பயணம் செல்வீர்கள்.

வியாபாரத்தில் உள்ளவர்கள் போட்டிகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை ஏற்படும். வீடு மற்றும் வாகனத்தால் செலவு ஏற்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.பிள்ளைகளின் கல்வி செலவு அதிகரிக்கும்.

பெண்கள் அடுத்தவர்களின் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்

பகவத் கீதையைப் படித்து ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி வந்தால் எல்லா பிரச்சனைகளும் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்

ஏப்ரல் மாதம் மீனம் ராசி பலன்

மீன ராசிக்காரர்கள் பலன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வாகனம் வாங்குவதற்கு எடுத்த முயற்சிகள் கைகூடும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கி லாபம் அதிகரிக்கும். முன்னேற்றம் உண்டாகும்.

அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு குறையும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். பணியில் திடீர் நெருக்கடி ஏற்படலாம். கவனமாக இருப்பது நல்லது. தேவையில்லாத பயணங்கள் ஏற்படலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் மூலம் நிம்மதி கிடைக்கும். நீங்கள் ஆசைப்பட்ட பொருட்களை வாங்குவீர்கள். ஆன்மீக பணியில் ஈடுபடுவீர்கள். திருமண முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவார்கள். அரசியலில் இருப்பவர்கள் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கலைத்துறையில் உள்ளவர்கள் நெருக்கடியான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டி வரும்.

பரிகாரம்

விநாயகப் பெருமானுக்கு தேங்காய் உடைத்துத் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் எல்லா கஷ்டங்களும் நீங்கி மன மகிழ்ச்சி உண்டாகும்.