Search
Search

புனேவில் நடந்த ஏ.ஆர். ரகுமானின் இசை கச்சேரி.. மேடை ஏறி தடுத்து நிறுத்திய போலீசார்!

இசை புயல் ஏ.ஆர் ரகுமான் அவர்களுடைய இசைக் கச்சேரி எங்கு நடந்தாலும் அங்கு அவருடைய ரசிகர்களின் கூட்டம் ஏராளமாக கூடுவது வழக்கமான ஒன்றுதான். இந்நிலையில் மகாராஷ்டிராவின் புனேவில் நடந்த ஏ.ஆர் ரகுமான் அவர்களுடைய இசை நிகழ்ச்சி ஒன்றில், இறுதி நேரத்தில் காவல் துறை அதிகாரிகள் மேடையில் ஏறி இசைக்கச்சேரி நிறுத்த வலியுறுத்திய விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் அவர்களுக்கு உலக அளவில் பல கோடி ரசிகர்கள் உள்ளனர், இந்தியாவை பொறுத்தவரை பல மாநிலங்களுக்கு ரகுமான் அவர்கள் நேரடியாக சென்று இசைக்கச்சேரிகளை நடத்தி வருகிறார்.

அதேபோல நேற்று மகாராஷ்டிராவின் புனேவில் அவருடைய இசை கச்சேரி நடந்து கொண்டிருந்தது. அப்போது ஏ.ஆர் ரகுமான் பாடலை பாடிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு போலீஸ் அதிகாரி மேடை ஏறி ரகுமானிடம் தனது கை கடிகாரத்தை காட்டி நிகழ்ச்சியை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இரவு 10 மணியை கடந்து இசை நிகழ்ச்சி நடந்து வந்ததாகவும், அந்த பகுதியில் 10 மணிக்கு மேல் நிகழ்ச்சிகள் நடக்க அனுமதி இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இருப்பினும் ரகுமான் பாடிக்கொண்டிருக்கும் போது பாதியில் அவரை தடுத்து நிறுத்தியதால் ரசிகர்கள் பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

போலீசார் கூறியதற்கு இணங்க ரகுமானும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த நிறுவனமும் போலீசார் கூறிய நிமிடத்திலேயே இசைக்கச்சேரி முடித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

You May Also Like