அரண்மனை 3 திரை விமர்சனம்

சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை படத்தின் 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் இன்று வெளியாகியுள்ளது.

இப்படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார்.
ராஷி கண்ணா தனது சிறு வயதிலேயே அரண்மனையில் பேய் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்கிறார். சிறு வயதிலேயே ஹாஸ்டலுக்கு சென்ற ராஷி கண்ணா பல வருடங்கள் கழித்து தனது சொந்த ஊருக்கு வருகிறார். ராஷி கண்ணாவிடம் தனது காதலை சொல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் ஆர்யா காத்துகொண்டு இருக்கிறார்.
ஒரு நாள் இரவு மீண்டும் அரண்மனையில் பேய் இருப்பதை தெரிந்துகொள்கிறார் ராஷி கண்ணா. தன்னை கொலை செய்ய நினைக்கும் பேயிடம் இருந்து தப்பித்து விடுகிறார். இந்த சம்பவத்தை சுந்தர்.சியிடம் ராஷி கண்ணா தெரிவிக்கிறார். இதை பற்றி விசாரிக்க சுந்தர் சி களத்தில் இறங்குகிறார் .
இந்நிலையில் முக்கியமான ஒருவரின் உடம்பில் பேய் புகுந்துள்ளது என்று தெரியவருகிறது. அந்த பேயிடம் இருந்து ராஷி கண்ணாவை எப்படி காப்பாற்ற முயற்சிகள் எடுக்கிறார். அவருடைய முயற்சியில் வெற்றி பெற்றாரா..? இல்லையா..? என்பதுதான் படத்தின் கதை.
ஆர்யா, சுந்தர்.சி, ராஷி கண்ணா எதார்த்தமாக நடித்துள்ளனர். மறைந்த நடிகர் விவேக் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார். இனி இவரை திரையில் பார்க்க முடியாதே என்கிற சோகம் மனதை உறுத்துகிறது.
யோகி பாபுவின் காமெடி வழக்கம்போல் செல்கிறது. படத்தின் திரைக்கதை மெதுவாக சென்றாலும் ஆண்ட்ரியாவின் நடிப்பு படத்தை தாங்கி நிற்கிறது. பின்னணி இசையில் மிரட்டியுள்ளார் இசையமைப்பாளர் சத்யா. பாடல்கள் சுமார் ரகம்தான். யு.கே. செந்திலின் ஒளிப்பதிவு அருமை.
மொத்தத்தில் அரண்மனை 3 ஏற்கனவே பார்த்த அரண்மனை 1,2 படங்களின் சாயலில் உள்ளது.