Search
Search

சிறுநீரக கோளாறுகளை நீக்கும் அர்த்தசலபாசனம் செய்முறை

அர்தசலபாசனம் செய்வதற்கு இரு கால்களையும் ஒரு சேர உயரே தூக்க வேண்டும். அர்த்தசலபாசனம் செய்வதற்கு முதலில் வலது காலை தூக்கி பின்வலது காலை இறக்கி அடுத்து இடது காலை தூக்கி பின் இடது காலை இறக்க வேண்டும். இரண்டு கால்களுக்குப் பதிலாக ஒவ்வொரு கால்களாக ஆசன நிலைக்கு கொண்டு போவதால் அர்தசலபாசனம் என்ற பெயர் பெற்றது.  

அர்த்தசலபாசனம் செய்முறை : கம்பளத்தில் குப்புறப்படுத்துக கொண்டு இரண்டு கைகளையும் உடம்பின் இரு பக்கங்களிலும் உடம்பை ஒட்டி வைத்துக் கொண்டு சுவாசத்தை உள்ளிலுத்து, முதலில் காலை மட்டும் தூக்கவும். மூட்டு மடங்காமல் விறைப்பாக இருக்க வேண்டும்.இந்த நிலையே அர்தசலபாசனம் நிலையாகும்.  

பின்னர் வலது காலை கீழே இறக்கி சுவாசத்தை வெளிவிடவும். அடுத்து சுவாசத்தை உள்ளிழத்துக் கொண்டு இடதுகாலை மட்டும் தூக்கவும். பின்னர் இடது காலை கீழே இறக்கி சுவாசத்தை வெளிவிடவும். இதே போன்று கால்களை மாற்றி மாற்றி ஐந்து ஆறு முறை செய்யவும்.  

அர்த்தசலபாசனம் பலன்கள்

  • அஜீரணம் போக்கும்
  • சிறுநீரகக் கோளாறுகள் போக்கும்
  • இரத்த ஒட்டத்தை சிராக்கும்
  • மூலநோயை தவிர்க்கும்
  • சுறுசுறுப்பையும், புத்துணர்ச்சியையும் அளிக்கும்.

மேலும், அனைத்து யோகாசனங்கள் மற்றும் அதன் பலன்களையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

You May Also Like