Search
Search

ராணுவ வீரரை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகர்..!

tamil trending news

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 29 வயது ராணுவ வீரர் சோனு குமார் சிங் ராஜ்தானி ரயிலில் பயணம் செய்ய நேற்று பரேலி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். காலை 9.30 மணி அளவில் இந்த ரயில் பரேலி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது.

அந்த ரயிலில் குபன் போரே என்ற டிக்கெட் பரிசோதகருக்கும் ராணுவ வீரருக்கும் டிக்கெட் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், டிக்கெட் பரிசோதகர் குபன், ராணுவ வீரரை ரயிலை விட்டு கீழே தள்ளியுள்ளார். இதில் சக்கரங்களுக்கு இடையே சிக்கியதில் ராணுவ வீரரின் ஒரு கால் துண்டானது. மற்றொரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. ராணுவ வீரருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டிக்கெட் பரிசோதகர் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் பரிசோதகர் தலைமறைவாகி உள்ளதால் அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

You May Also Like